Friday, December 11, 2009

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே -சேகுவேரா

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கானஉன் உரிமையை காக்க என் உயிரையும் கொடுப்பேன்- வால்டேர்

சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை. எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே சுதந்திரமான மனிதன் என்பேன். ---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.



நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்---- மாவோ
கடவுளை
மறமனிதனை நினை ----------தந்தை பெரியார்.

பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்

கவிதை

வாழ்க்கை கற்று
கொடுத்துகொண்டே இருக்கும்
புதிய புதிய விசயங்களை!
மறந்துபோதலின் அடிப்படை தத்துவங்களையும்.......
கல்லாக்கிகொள்ளும் எண்ணங்களையும்!

புறக்கணித்தல்:

நான் இதுவரை கண்டதில்லை
உன்னைஎன்கிற ரீதியில்
நீ என்னை கடந்து போகிறபோதெல்லாம்சிரித்துகொள்வேன்
நான்.....!
என்னை கண்ணாடியில்பார்க்கிற
உணர்வோடு....!


ஷேர் மார்க்கெட் புன்னகையை தருமா?


கண்மூடித்தனமான முதலீடாக இல்லாமல் எந்த துறை, எந்த நிறுவனம் அது என்ன உற்பத்தியில் ஈடுபடுகிறது என்பது போன்ற விசயங்களில் கவனத்தோடு இருந்தால் நிச்சயமாக புன்னகையோடு பொன்நகையையும் தரும்....!











Thursday, December 10, 2009

பங்கு சந்தை குறித்த கேள்விகளுக்கு தொலைபேசி எண்

பங்குச்சந்தை குறித்த தங்கள் ஐயங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்: 9894208789

பங்குச்சந்தை

பங்குச்சந்தை குறித்த உங்கள் ஐயங்களுக்கு உரிய விடை வேண்டுமா?

தொடர்பு கொள்ளுங்கள் : 9894208789

தினசரி பங்கு வர்த்தகம் எளிய வழிமுறைகள்

அள்ள அள்ளப்பணம் கொட்டும் பங்குச்சந்தையில் என்றால் எல்லோரும் அள்ளிக்கொள்ளலாம் பணம் .......!!!!! ஆனால் பங்குச்சந்தை என்பது அப்படி இல்லை இது மிகவும் ஆபத்தான ஒரு துறை! அதுவும் தினசரி வர்த்தகம் என்பது அத்தனை சுலபமில்லை நண்பர்களே....!



எதிர்மறை சிந்தனையாக இது தோன்றலாம் உங்களுக்கு ஆனால்நடைமுறை உண்மை இது........!



உங்களுடைய கடின உழைப்பினால் ஈட்டிய பொருளை இழப்பதுவா உங்கள் எண்ணம்?



அள்ள அள்ளப்பணம் தரும் அதற்கான சில முறையான யுக்திகளை நீங்கள் கையாண்டீர்கள் என்றால் நீங்களும் பண்ணலாம் பணம்....!



நீங்கள் இதற்க்கு முன் எந்த Technical Analysis வகுப்புகளிலும் கலந்து கொள்ளாதவர் என்றால் மிகவும் நன்று!



சில முக்கிய விஷயங்கள்:

# முதலீடு செய்யும் திறன்...

# அளவான ஆசை

# போதும் என்கிற மனம்

# தோல்வியை தாங்குகிற பக்குவம்

# போராடும் குணம்

# நடந்து முடிந்ததை எண்ணாமல் நடக்கவேண்டியதை எண்ணுதல்

# அடுத்தவர் சொல் கேளாமை (இது முக்கியம்)

இவை எல்லாம் அடிப்படை முக்கிய குணங்களாகும்!